கொரோனா பரவல் – முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!!
கொரோனா பரவல் – முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகல் 12 மணி அளவில் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கொரோனா நான்காம் அலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தொற்று பரவலைத் தடுக்க பொது இடங்களில் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்தும், அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கிறார்.
தொடர்ந்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து, பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
newstm.in

