விடாமல் துரத்தும் கொரோனா... சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா உறுதி..!!

விடாமல் துரத்தும் கொரோனா... சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா உறுதி..!!

விடாமல் துரத்தும் கொரோனா... சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா உறுதி..!!
X

கடந்த 3 ஆண்டுகளாகவே நம்மை உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.62 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 63,62,197 பேரை தாக்கி கொன்றுள்ளது. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 55,50,13,578 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 52,98,00,216 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,88,51,165 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிங்கப்பூரை பொறுத்தவரை, 14,73,180 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 13,79,113 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,419 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona

இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் மற்றும் அமைச்சர் எட்வின் டோங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

67 வயதான ஹலிமா இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் “லேசனா காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பெரியளவில் பாதிப்பில்லை. நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். இந்த வார நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

singapore-speaker

53 வயதான பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்திற்கு முன் கொரோனா தொற்று சோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சபாநாயகர் டான் தனது பதிவில், அறிகுறிகள் லேசாக இருக்கிறது என்றும் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கும்படியும், கொரோனா தொற்றில் இருந்து பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் தப்பிப்பதற்கு தடுப்பூசி உதவிகிறது. எனவே உங்கள் முறை வரும்போது பூஸ்டர்களைப் பெறுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் டோங் (52), கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

Tags:
Next Story
Share it