Theme Check

மீண்டும் மிரட்டும் கொரோனா – 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!!

மீண்டும் மிரட்டும் கொரோனா – 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!!

மீண்டும் மிரட்டும் கொரோனா – 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!!
X

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 2 மாதங்கள் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில், கடந்த வாரம் தினமும் ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

corona

தலைநகர் டெல்லியில் 1.42 விழுக்காடாக இருந்த கொரோனா பரவல், தற்போது 3.49 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனாவை தொடர்ந்து கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், முகக்கவசம் அணிவதில் கவனம் செலுத்துதல், தடுப்பூசி போடும் பணிகளை விரிவுப்படுத்துதல் போன்றவற்றை பின்பற்றவும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

newstm.in

Next Story
Share it