Theme Check

நாளை முதல் 12 -14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி!!

நாளை முதல் 12 -14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி!!

நாளை முதல் 12 -14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி!!
X

கொரோனா தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பின் வீரியம் குறைவாக இருப்பதற்கு தடுப்பூசியே முக்கிய காரணியாக உள்ளதாக சுகாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். இதனால், தடுப்பூசி செலுத்தும் பணியில் ஒன்றிய மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் 12 முதல் 14 வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கு நாளை (மார்ச் 16) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Next Story
Share it