Theme Check

இன்று முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

இன்று முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

இன்று முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!
X

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகத்தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக அடுத்தடுத்து பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் மட்டும் அடுத்ததாக புதிய வகை கொரோனா பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்படுகின்றன. ஒவ்வொருவரும் குறைந்தது 2 டோஸ்களை செலுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்படுவோர் கூடுதலாக பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூடுதலாக 2 டோஸ்கள் பூஸ்டர் வரை செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1

சமீபத்தில் 15 முதல் 18 வயது வரை உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது 12- 14 வயதுடையோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12- 14 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.இந்தியாவில் 12- 14 வயதுடைய சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு இன்று (16) முதல் தொடங்கும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.12-14 வயதுடையோருக்கு கார்பிவேக்ஸ் (Corvbevax)தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

1

இந்த வயதுடையோர் தாங்களாகவோ அல்லது பெற்றோர் துணையுடனோ கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள், பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்யலாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறார்கள் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், கோவின் இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 பேர் கொண்ட குடும்பத்தல் ஒருவரது மொபைல் எண்ணை பயன்படுத்தி 4 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.

1

2010 ஆம் ஆண்டு பிறந்த சிறுவர்கள், தடுப்பூசி போடும் நாளில் 12 வயதை எட்டியிருக்க வேண்டும் என்றும், ஒருவேளை 12 வயதை எட்டியிருக்கவில்லை என்றால் முன்பதிவு செய்திருந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு 28 நாட்கள் இடைவெளிக்கு பிறகு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
Share it