Theme Check

“கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல” : மத்திய அரசு அதிரடி!!

“கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல” : மத்திய அரசு அதிரடி!!

“கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல” : மத்திய அரசு அதிரடி!!
X

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது, அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல், துஷார் மேத்தா விளக்கம் அளித்தார். அதாவது, 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் அது கட்டாயமல்ல என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு என அவர் கூறினார்.

covid_vaccine

முன்னதாக தடுப்பூசி செலுத்தாதவர்களாலேயே, கொரோனா உருமாற்றம் அடைவதாக தமிழக அரசு கூறியிருந்தது. இந்நிலையில் தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

ஆனாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் நலன் மற்றும் சுற்றி இருப்பவர்களின் நலன் கருதி தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it