Theme Check

காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள்... தமிழக அரசு புதிய அறிவிப்பு !

காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள்... தமிழக அரசு புதிய அறிவிப்பு !

காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள்... தமிழக அரசு புதிய அறிவிப்பு !
X

கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இலக்கை எட்டி வருகிறது. இதுவரையில் 9 கோடியே 64 லட்சத்து 52 ஆயிரத்து 101 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தமிழக அரசு சார்பில், அனைத்து அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்துடன் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரையில் தமிழகத்தில் தடுப்பூசி வீணாவதை தடுத்து சேமித்ததன் மூலம் 11 லட்சம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

VACCINE

தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அங்கு அதிகம்பேர் செல்வது இல்லை. இந்த நிலையில், இருப்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் காலாவதி ஆவதாக மருத்துவ சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. பல லட்சம் மதிப்புள்ள கொரோனா தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தப்படாததால் வீணாகிறது. இதை கருத்தில் கொண்டு காலாவதி ஆகக்கூடிய தடுப்பூசிகளை அரசு பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக மாற்று தடுப்பூசிகளை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் காலாவதியான தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் இருந்தால் அதனை கொடுத்துவிட்டு இன்று முதல் புதிய தடுப்பூசிகள் மாற்றிக் கொடுக்கப்படுகிறது. அதற்கு பதிலாக சுகாதாரத்துறையில் இருந்து மேலும் 6 மாத கால அவகாசம் உள்ள தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

VACCINE

தனியார் மருத்துவமனைகள் அந்தந்த மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it