ஆட்சி அமைந்த 3 மாதத்தில் ஊழல் புகார்.. உடனே பதவி நீக்கம், கைது- அசத்தும் முதலமைச்சர் !!
ஆட்சி அமைந்த 3 மாதத்தில் ஊழல் புகார்.. உடனே பதவி நீக்கம், கைது- அசத்தும் முதலமைச்சர் !!

பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. நாங்கள் வெளிப்படையான ஆட்சியை நடத்தும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உறுதியளித்திருந்தார். ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அமைச்சர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது புயலை கிளப்பியுள்ளது.
நிலைமையை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், தொடர்புடைய அமைச்சரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளார்.
அதாவது, அங்கு கடந்த மார்ச் மாதம் ஒரு பெண் உள்பட 10 போ் அமைச்சா்களாக பதவியேற்றனர். இதில் 8 போ் முதல் முறை எம்எல்ஏ ஆனவர்களாவர். 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த முறை எம்எல்ஏவாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஹா்பால் சிங் சீமா மற்றும் குா்மீத் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது இவர்களில் மாநில சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு 1 சதவீத கமிஷன் தருவதாக அரசு அதிகாரிகளிடம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரில் அவருக்கு எதிராக நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசு ஒப்பந்தங்களுக்கு ஒரு சதவீதம் கமிஷன் தருவதாக அரசு அதிகாரிகளிடமே ஒப்பந்தம் போட்டதாக அமைச்சர் விஜய் சிங்லா மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விஜய் சிங்லாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
newstm.in

