Theme Check

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி!!

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி!!

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி!!
X

தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் டெல்லி சென்றுள்ளதாகவும், விரைவில் பலர் சிக்குவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பா..க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, . பா..கவின் சாதனைகளோடு, தி.மு.., அரசின் வேதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.

நேரு முதல் கருணாநிதி வரை இந்திய நிலப்பரப்புகளை மற்ற நாட்டிற்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். தற்போது பிரதமர் மோடி அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்தார்.

raja 1

தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியல் டெல்லி சென்றுள்ளது என்றும் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இருக்கிற கோவிலை பராமரிக்க தகுதியற்ற அரசு சிதம்பரம் கோவிலை கைப்பற்ற முயற்சிக்கிறது. பாப்பான்சத்திரம் காசி விஸ்வநாதர், கோபால்சாமி கோவிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் ஆக்கிரமிப்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும் அகற்ற தி.மு.., அரசு முன் வரவில்லை என்று கூறினார்.

newstm.in

Next Story
Share it