தம்பதிகள் முத்தமிட, கட்டியணைக்கத் தடை!!
தம்பதிகள் முத்தமிட, கட்டியணைக்கத் தடை!!

சீனாவில் தம்பதிகள் ஒன்றாக உறங்க, முத்தமிட, கட்டியணைக்க, ஒன்றாக அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் நகரில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதில் இரவு தம்பதிகள் தனித்தனியாக படுத்து உறங்குங்கள், முத்தமிடாதீர்கள், கட்டியணைக்க அனுமதியில்லை, தனித்தனியாகவே உணவருந்துங்கள். என்று அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதுபோல், வீட்டின் ஜன்னல்களைத் திறக்கவும், பாடல்களைப் பாடவும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு டிரோன்கள் மூலம் ஷாங்காய் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றின் பிஏ.2 என்ற உருமாறிய பரவல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் பெரும்பாலான பாதிப்பு ஷாங்காயில் பதிவாகி வருகிறது.
2.5 கோடி மக்கள்தொகை கொண்ட ஷாங்காய் நகரில் ஏற்கெனவே பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாம்கள் அதிகளவில் நடத்தப்பட்டன.
As seen on Weibo: Shanghai residents go to their balconies to sing & protest lack of supplies. A drone appears: “Please comply w covid restrictions. Control your soul’s desire for freedom. Do not open the window or sing.” https://t.co/0ZTc8fznaV pic.twitter.com/pAnEGOlBIh
— Alice Su (@aliceysu) April 6, 2022
இந்நிலையில், ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 2,000 ராணுவ மருத்துவப் பணியாளா்கள் உள்பட 10,000 சுகாதாரப் பணியாளா்கள் அனுப்பப்பட்டுள்ளனா். ஷாங்காய் நகரில் படிப்படியாக தடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு ஏராளமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
newstm.in

