Theme Check

தோனி நடிகரின் காதலியான நடிகைக்கு நீதிமன்றம் சலுகை.. ஆனாலும் ஏமாற்றம் !!

தோனி நடிகரின் காதலியான நடிகைக்கு நீதிமன்றம் சலுகை.. ஆனாலும் ஏமாற்றம் !!

தோனி நடிகரின் காதலியான நடிகைக்கு நீதிமன்றம் சலுகை.. ஆனாலும் ஏமாற்றம் !!
X

பாலிவுட் திரையுலகில் வளர்ந்துவந்த இளம்நடிகர் சுஷாந்த் சிங் திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். இவரது மரணம் பாலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது. இவரது மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல் வெளியானது. இதில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலரும் சிக்கினர்.

Rhea-ChakrabortyRhea-ChakrabortyRhea-Chakraborty

அந்த வகையில், சுஷாந்த் சிங் திடீர் மரணத்தை தொடர்ந்து அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி, போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

முன்னதாக அவர் தேடப்படும் குற்றவாளியாக விசாரணை அமைப்புகளால் அறிவிக்கப்பட்டதால், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. மும்பை போலீஸ், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பாட்னா போலீஸ் விசாரணை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு என்று பல்வேறு அமைப்புகளும் வழக்குகளை விசாரித்து வந்ததால் நடிகை ரியா சக்ரபோர்த்தி இந்தியாவை விட்டு வெளிநாடு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில், அபுதாபியில் நடக்கும் ஐஐஎப்ஏ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், தான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

Rhea-Chakraborty

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நாளை (5ஆம் தேதி) வரை அபுதாபிக்கு சென்று வர அனுமதி அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு ரியா சக்ரபோர்த்தி வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்தது. எனினும் பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் அபுதாபியில் நடக்கும் ஐஐஎப்ஏ விருது நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, வழக்குகள் ஒரு பக்கம் இருந்தாலும் ஜாமீனில் வெளியே வந்த சில மாதங்களில், மீண்டும் திரைப்படங்களில் ரியா சக்ரபோர்த்தி நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

newstm.in

Tags:
Next Story
Share it