Theme Check

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!!
X

முரசொலி அறக்கட்டளை சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலின பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என எல். முருகன் கருத்து தெரிவித்தது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

anna arivalayam

கடந்த முறை ஆஜராக உத்தரவிட்ட போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை என மனு தாக்கல் செய்த நிலையில், நேற்றும் எல்.முருகன் ஆஜராகவில்லை.

இதையடுத்து ஏப்ரல் 22ஆம் தேதி எல்.முருகன் ஆஜராக வேண்டும் என சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அலீசியா உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it