பள்ளியில் 8 மாணவிகள் கர்ப்பம்- ஆசிரியருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் !!
பள்ளியில் 8 மாணவிகள் கர்ப்பம்- ஆசிரியருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் !!

13 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி உள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங் நகரில் உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உதவித்தொகை மூலம் ஏழை - எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி கல்வி பயின்று வந்தனர். இங்கு, ஹெரி வைரவன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், ஹெரி வைரவன் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வி உதவித்தொகையில் தங்கி படிக்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 13 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் 8 மாணவிகள் கர்ப்பமாகியுள்ளனர். 5 ஆண்டுகளாக நடந்த இந்த கொடூரம் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனையடுத்து ஹெரி வைரவன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பாண்டுங் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆசிரியர் ஹெரி வைரவன் குற்றவாளி என நிரூபனமானது. மேலும் ஆசிரியருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அந்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆனால், மரண தண்டனை வழங்கக்கோரி வழக்கறிஞர் ஒருவர் மேல்முறையீடு செய்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கிழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்து மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
newstm.in