ராஜபக்சேக்கு நெருக்கடி: பதவியேற்ற 24 மணி நேரத்தில் புதிய நிதி அமைச்சர் ராஜினாமா !

ராஜபக்சேக்கு நெருக்கடி: பதவியேற்ற 24 மணி நேரத்தில் புதிய நிதி அமைச்சர் ராஜினாமா !

ராஜபக்சேக்கு நெருக்கடி: பதவியேற்ற 24 மணி நேரத்தில் புதிய நிதி அமைச்சர் ராஜினாமா !
X

இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும் அதற்கு தட்டுப்பாடு உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு நிலையங்களில் மக்கள் பல மணி நேரம் காத்துகிடக்கின்றனர்.

இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சரகள் அனைவரும் நேற்று ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து நிலைமையை கையாளும் வகையில் 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டது.

protest

அதன்படி, நாட்டின் நிதி அமைச்சராக இருந்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நேற்று நியமிக்கப்பட்டார். அலி சப்ரி மற்றும் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு அதிபர் கோத்தபயா நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், புதிய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அலி சப்ரி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அலி சப்ரி பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், இலங்கை அரசியலில் உச்சபட்ச குழப்பம் ஏற்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it