குவியும் பாராட்டுக்கள்..!! மீண்டும் அவர் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துள்ள நடிகர் சோனு சூட்..!!
குவியும் பாராட்டுக்கள்..!! மீண்டும் அவர் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துள்ள நடிகர் சோனு சூட்..!!

கொரோனா தொற்று காலத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து, ‘ரியல் ஹீரோ’ என்று புகழ் பெற்றவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்.அதுமட்டுமின்றி, மும்பையில் உள்ள அவருடைய வீடு தேடி வரும் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் உதவி வருகிறார். இவருடைய சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு உதவ நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார். 4 கால்கள், 4 கைகளுடன் பிறந்த குழந்தைக்கு அறுசை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர்.தேவையற்ற உடல் உறுப்புகளை அகற்றும் இந்த அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்த சோனு சூட், சிகிச்சை முழுவதும் சிறுமியின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த சௌமுகி என்ற பெண் குழந்தைக்கு சோனு சூட் உதவி செய்தார். சமூக வலைதளங்கள் மூலம் குழந்தையின் உடல்நிலை குறித்து அறிந்த நடிகர் உதவியதோடு சம்பவ இடத்திற்கும் நேரில் வந்தார் . அவரது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ''குழந்தை வீட்டிற்குச் செல்லத் தயாராகிறாள்'', என்று சோனு சூட் கூறினார்.

