இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா? - டெல்லியிலும் பரவும் குரங்கு அம்மை பாதிப்பு !!
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா? - டெல்லியிலும் பரவும் குரங்கு அம்மை பாதிப்பு !!

அரிய வகை தொற்று நோயான குரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் முதல் பாதிப்பு, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி கண்டறியப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய அவருக்கு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரண்டாவதாக, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப் பட்டது. இந்நிலையில் 3ஆவது நபராக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு இந்தியாவில் முதலில் குரங்கு அம்மை கேரளாவில் பரவியது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் 4ஆவதாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் மொத்த பாதிப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. இவர் வெளிநாடு செல்லாத நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது
newstm.in