Theme Check

தனியார் வங்கியால் திடீர் கோடீஸ்வரர்கள் ஆன வாடிக்கையாளர்கள்!!

தனியார் வங்கியால் திடீர் கோடீஸ்வரர்கள் ஆன வாடிக்கையாளர்கள்!!

தனியார் வங்கியால் திடீர் கோடீஸ்வரர்கள் ஆன வாடிக்கையாளர்கள்!!
X

சென்னை எச்டிஎப்சி வங்கிக் கிளையில், வாடிக்கையாளராக உள்ள 100 பேரின் வங்கி கணக்கில் தலா 13 கோடி ரூபாய் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கிலிருந்து தவறுதலாக 100 வாடிக்கையாளர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பணப் பரிமாற்றம் நடைபெற்ற வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்த வங்கி அதிகாரிகள், தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பணப்பரிமாற்றம் நடைபெற்றதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

HDFC

இது தொடர்பாக வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்திய குற்றப்பிரிவு மற்றும் வங்கி மோசடி பிரிவுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வங்கியின் இணையதள சேவையை ஹேக் செய்து இது போன்ற பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Investigation

ஒரே நேரத்தில் 100 பேரின் வங்கி கணக்கில் பண பரிமாற்றம் நடந்ததையடுத்து, அவர்களின் வங்கிக் கணக்குகளையும் தற்காலிகமாக முடக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரை எச்டிஎப்சி வங்கி கிளையின் சார்பாக எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it