சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு..!! இன்று முதல் அமல்..!!
சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு..!! இன்று முதல் அமல்..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. மேலும், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயையை கடந்து விற்பனையாகிறது. இந்த நிலையில் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பாதிக்கும் வகையில், புதிய இணைப்புக்கான கட்டணத்தை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத் தொகை ரூ.1,450 இருந்த நிலையில், தற்போது ரூ.750 உயர்த்தப்பட்டு ரூ.2,200 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டர் வைப்புத் தொகை ரூ.800-லிருந்து ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை 2 சிலிண்டர்கள் இணைப்புடன் புதிய இணைப்பு தேவைப்படுவோருக்கு கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது இதற்கு முன் 2 சிலிண்டர்களுடன் சமையல் கேஸ் புதிய இணைப்புக்கு ரூ,2900 செலுத்த வேண்டியிருந்தது.
ஆனால், புதிய கட்டண உயர்வின்படி 2 சிலிண்டர்களுடன் புதிய இணைப்புக்கு ரூ.4,400 செலுத்த வேண்டும். கூடுதலாக ரெகுலேட்டருக்கு ரூ.150 செலுத்திய நிலையில் அந்தக் கட்டணம் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், இனி ரூ.150க்கு பதிலாக, ரெகுலேட்டருக்கு ரூ.250 செலவழிக்க வேண்டும். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஜூன் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய கட்டணம் உயர்வால் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற்ற பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுள்ளனர். இனிமேல் 2-வதாக புதிய சிலிண்டர் இணைப்புக்கு உஜ்வாலா திட்டத்தில் இருக்கும் பெண்கள் விண்ணப்பித்தால் கூடுதல் சிலிண்டர் இணைப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் யாரேனும் புதிய கேஸ் இணைப்பு பெற்றால் முன்கூட்டியே சிலிண்டருக்கான வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

