Theme Check

#BREAKING:- சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு.. நாளை முதல் அமல்..!

#BREAKING:- சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு.. நாளை முதல் அமல்..!

#BREAKING:- சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு.. நாளை முதல் அமல்..!
X

புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவோருக்கு சிலிண்டர் டெபாசிட் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கான டெபாசிட் தொகை 1,450 ரூபாயாக இருந்து வந்தது. அது தற்போது 2,200 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதேபோல, 5 கிலோ எடை கொண்ட சிறிய சிலிண்டருக்கான டெபாசிட் தொகை 800 ரூபாயாக இருந்து வந்தது. அது தற்போது 1,150 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதுதவிர, 150 ரூபாயாக இருந்த ரெகுலேட்டருக்கான கட்டணம் 250 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
Next Story
Share it