Theme Check

திமுக எம்எல்ஏ கார் கண்ணாடி உடைப்பு!!

திமுக எம்எல்ஏ கார் கண்ணாடி உடைப்பு!!

திமுக எம்எல்ஏ கார் கண்ணாடி உடைப்பு!!
X

ஆர்கே நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எபினேசரின் கார் கண்ணாடியை அதிமுகவினர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்றது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஒருமணிநேரம் ஒதுக்கப்பட்டது.

ebi1

இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை சவுந்திரபாண்டி பள்ளி அருகில் சென்று கொண்டிருந்த ஆர்கே நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எபினேசரை அதிமுகவினர் சிலர் வழிமறித்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அவரது காரின் பின் பக்க கண்ணாடியை சிலர் கல்வீசி உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அப்பகுதிக்கு வந்த காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it