Theme Check

தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலரின் கணவர்.. விரக்தியில் பெண் தீக்குளிக்க முயற்சி..!

தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலரின் கணவர்.. விரக்தியில் பெண் தீக்குளிக்க முயற்சி..!

தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலரின் கணவர்.. விரக்தியில் பெண் தீக்குளிக்க முயற்சி..!
X

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருபவர் பேபி சசிகலா (35). இவர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
கவுன்சிலர் கணவர் தொல்லை தாங்க முடியல'' - ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க  முயன்ற பெண் | Woman tries to commit suicide in collector office at Namakkal  | Puthiyathalaimurai ...
இதனைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நல்லிபாளையம் போலீசார், துரிதமாக செயல்பட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றி, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், நடைபெற்ற நகராட்சித் தேர்தலின்போது தங்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்க வராத காரணத்தினால் 13வது வார்டு திமுக கவுன்சிலர் பர்கத்துனிஷாவின் கணவர் நாசர் பாஷா என்பவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுவதாகவும் கூறினார்.
கவுன்சிலர் கணவர் தொல்லை தாங்க முடியல'' - ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க  முயன்ற பெண் | Woman tries to commit suicide in collector office at Namakkal  | Puthiyathalaimurai ...
திமுக கவுன்சிலரின் கணவர் தன்னை மிரட்டுவதாகக் கூறி பெட்ரோல் ஊற்றி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
Share it