ஒரு போட்டோவுக்காக தகராறில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள் !!
ஒரு போட்டோவுக்காக தகராறில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள் !!

தமிழ்நாடு முழுவதும் போலியோ தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இந்த நிலையில், திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆட்சியர் சிவராசு கலந்துக்கொண்டு சொட்டுமருந்து முகாமினைத் தொடங்கிவைத்தார்.
அப்போது மிளகுப்பாறை பகுதியைச் சேர்ந்த 54-வது வார்டு திமுக கவுன்சிலரான புஷ்பராஜ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த 55-வது வார்டு திமுக கவுன்சிலரான ராமதாசும் ஆட்சியர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்று ஆட்சியருக்கு பின்னால் நின்று போஸ் கொடுத்ததார்.

இதனால் ஆட்சியர் நின்றுக்கொண்டிருந்தபோது எனது வார்டுக்கு எப்படி வரலாம் என புஷ்பராஜ் கேட்டபோது, பதிலளித்துவிட்டு ராமதாஸ் அங்கிருந்து நகர்ந்தார்.
அதேநேரம் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் மற்றும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் திமுக கவுன்சிலர் ராமதாஸ் முந்திக்கொண்டதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஆரம்ப சுகாதார மையம் முன்பு திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஆதரவாளர்களும் தகராறில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருவரையும் சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

