Theme Check

திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி சர்டிஃபிகேட்..!

திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி சர்டிஃபிகேட்..!

திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி சர்டிஃபிகேட்..!
X

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

“தமிழகத்தில் அதிமுக ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது; எதிர்க்கட்சி மீது பொய் வழக்குப் போடுவதை திமுக வழக்கமாக கொண்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜனநாயக ரீதியாக செயல்பட்டதற்கு கைது செய்யப்பட்டுள்ளார். கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்து போலீசில் ஒப்படைப்பது குற்றமா..?

திமுக கள்ள ஓட்டுப் போடுவதில் வல்லமை பெற்றவர்கள். வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவிற்குதான் வாக்கு செல்வது போன்று தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள்” என்று கூறினார்.

Next Story
Share it