நகர்ப்புற தேர்தலில் திருநங்கைக்கு வாய்ப்பளித்த திமுக!!
நகர்ப்புற தேர்தலில் திருநங்கைக்கு வாய்ப்பளித்த திமுக!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் இம்மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், சட்டமன்ற தேர்தலின்போது ஏற்படுத்தப்பட்ட திமுக கூட்டணி தொடர்கிறது. எதிர்த்தரப்பில் அதிமுக, பாஜக கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் வேலூரில், ஓல்டு டவுன் பகுதியை உள்ளடக்கிய 37-வது வார்டில், தி.மு.க சார்பில் கங்கா என்ற திருநங்கை கவுன்சிலர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு செயலாளராக பொறுப்பில் இருக்கும் கங்கா, 50 பேர் கொண்ட கலைக்குழுவை நடத்தி வருகிறார். தான் வெற்றி பெற்றால், தான் சார்ந்திருக்கும் திருநங்கை சமூகத்திற்கே பெருமை என்றும், 37 வார்டில் உள்ள 63 தெருக்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவேன் என்றும் கூறியுள்ளார்.
newstm.in

