Theme Check

திமுக பிரமுகர் கொலை வழக்கு – கூலிப்படை தலைவன் கைது!!

திமுக பிரமுகர் கொலை வழக்கு – கூலிப்படை தலைவன் கைது!!

திமுக பிரமுகர் கொலை வழக்கு – கூலிப்படை தலைவன் கைது!!
X

தி.மு.க பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவனை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 1ஆம் தேதி மடிப்பாக்கத்தில் கட்சி அலுவலகம் முன்பு செல்வம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

பிப்ரவரி 3ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கூலிப்படையைச் சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், கிஷோர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

arrest

கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு நபரான அருண் பிப்ரவரி 15ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கூலிப்படையைச் சேர்ந்த முக்கிய நபரான அருணின் உறவினரான முருகேசன் தான் கூலிப்படையின் தலைவன்.

இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவனான முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். முருகேசன் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it