Theme Check

எஸ்.பி.வேலுமணியின் கோட்டைக்குள் தடம் பதித்த திமுக!!

எஸ்.பி.வேலுமணியின் கோட்டைக்குள் தடம் பதித்த திமுக!!

எஸ்.பி.வேலுமணியின் கோட்டைக்குள் தடம் பதித்த திமுக!!
X

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால் வேலுமணியின் கோட்டைக்குள் தடம் பதித்துள்ளது திமுக.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், பேரூர் பேரூராட்சி 13ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணி தோல்வி அடைந்ததால், அதை தாங்க முடியாமல் அவருடைய மகள் பூத் ஸ்லிப்பை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Thondamuthur

அதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக அங்கு வந்து அவரை சமாதானப்படுத்தினர். இந்நிலையில், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் இனி திமுகவின் கோட்டையாக மாறியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் முன்னாள் அமைச்சரும், தற்போதைய தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it