ராஜினாமா செய்யும் திமுகவினர்!!
ராஜினாமா செய்யும் திமுகவினர்!!

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அவர்கள் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணை தலைவர் பதவியை பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணை தலைவர் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கியிருந்தது.
ஆனால் திமுக அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு சிலர் வெற்றி பெற்றனர். இதனையடுத்து விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இதற்கு அதிருப்தி தெரிவித்தனர்.

அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்படி போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
போட்டி வேட்பாளர்களின் செயலால் குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணை தலைவர் பதவியில் இருந்து பாண்டியன் என்பவர் ராஜிநாமா செய்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் துணை தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பாண்டியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வரின் வேண்டுகோளை அடுத்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
newstm.in

