Theme Check

தவறு இருந்தால் தெரிவிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!

தவறு இருந்தால் தெரிவிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!

தவறு இருந்தால் தெரிவிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!
X

கடந்த 21-ம் தேதி 5,529 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதனை 11,78,000 பேர் தேர்வுக்கு வின்னப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரவித்துள்ளது.

TNPSC

இந்த நிலையில், தேர்வில் சில வினாக்கள் பிழையாக கேட்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், குரூப் 2, 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல. தேர்வுக்கான தற்காலிக ஆன்சர் கீ விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

Balachandran-TNPSC

மேலும் இது உத்தேச விடைகள் தான் என்றும், இதில் ஏதேனும் தவறு இருந்தால் ஒருவார காலத்துக்குள் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம். ஜூன் 3ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி தரப்பு கூறியுள்ளது.

Next Story
Share it