Theme Check

தூத்துக்குடி- பெங்களூரு இடையே தினசரி விமான சேவை !!

தூத்துக்குடி- பெங்களூரு இடையே தினசரி விமான சேவை !!

தூத்துக்குடி- பெங்களூரு இடையே தினசரி விமான சேவை !!
X

தூத்துக்குடி- பெங்களூரு இடையே வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை தொடக்கம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுபாதை 1,350 மீட்டராக உள்ள நிலையில், அதனை ரூ.380 கோடியில் 3,115 மீட்டராக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி-பெங்களூரு இடையே வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

airport

மேலும் தூத்துக்குடி- நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு நேரடி விமான சேவை தொடங்குவதால், விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இனி விரைவாக பெங்களூருக்கு நேரடி விமானம் மூலம் செல்ல முடியும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it