Theme Check

அட கொடுமையே.. சாப்பாடு போட மறந்த மருமகளை துப்பாக்கியால் சுட்டுதள்ளிய மாமனார் !!

அட கொடுமையே.. சாப்பாடு போட மறந்த மருமகளை துப்பாக்கியால் சுட்டுதள்ளிய மாமனார் !!

அட கொடுமையே.. சாப்பாடு போட மறந்த மருமகளை துப்பாக்கியால் சுட்டுதள்ளிய மாமனார் !!
X

காலை உணவு வழங்காத ஆத்திரத்தில் மருமகள் மீது மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவின் தானேயின் ரபோடி பகுதியில் வசிப்பவர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல் (76). இவர் தனது மகன், மருமகள் அவர்களின் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் குடும்பத்தில் பெரியளவில் இல்லாமல் அவ்வப்போது சிறு சிறு தகராறுகள் ஏற்படும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில், பாட்டீல்க்கு அவரது 42 வயது மருமகள், நேற்று முன்தினம் காலை 11:30 மணி வரை உணவு மற்றும் தேநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாட்டீல் மருமகளுடன் தகராறு செய்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த தன் கைத்துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுள்ளார்.

dfs

இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள், காயமடைந்த மருமகளை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பாட்டீலின் மீது மற்றொரு மருமகள் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, பாட்டீல் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவுக்காக மருமகள் மீது மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it