அசுரன் பட நடிகை உயிருக்கு ஆபத்தா?.. வில்லங்கம் ஏற்படுத்திய இயக்குனர் கைது !!

அசுரன் பட நடிகை உயிருக்கு ஆபத்தா?.. வில்லங்கம் ஏற்படுத்திய இயக்குனர் கைது !!

அசுரன் பட நடிகை உயிருக்கு ஆபத்தா?.. வில்லங்கம் ஏற்படுத்திய இயக்குனர் கைது !!
X

அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பரபரப்பை கிளப்பிய திரைப்பட இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

manju-warrier

இந்த நிலையில், மலையாள திரைப்பட இயக்குனர் சணல் குமார் சசிதரன் என்பவர் தனது வலைத்தளப் பக்கத்தில், நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இவரின் இந்த பதிவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆனால் மஞ்சு வாரியர் எப்போதும் போல வீட்டில் தான் இருந்துள்ளார். இதனால் மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் சணல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

manju-warrier

இது தொடர்பாக மஞ்சு வாரியர் அளித்த புகாரில், சமூக வலைத்தளங்களில் தன்னை தொடர்ந்து அவமானப் படுத்துவதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சணல் குமார் செயல்படுவதாகவும், தான் செல்லும் இடத்திற்கு எல்லாம் பின் தொடர்ந்து வந்து என்னை தொந்தரவு செய்கிறார் என்றும் மஞ்சு வாரியர் குறிப்பிட்டுள்ளார்.

மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள எர்ணாகுளம் காவல்துறை இயக்குனர் சணல் குமாரை கைது செய்துள்ளனர். அவரை கைது செய்யும் பொழுது எடுக்கப்பட்ட லைவ் வீடியோவையும் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it