அம்மா, அப்பா சண்டையில் பலியான மகள்!!

அம்மா, அப்பா சண்டையில் பலியான மகள்!!

அம்மா, அப்பா சண்டையில் பலியான மகள்!!
X

தாயை தாக்கிய தந்தையை தடுத்து நிறுத்தும்போது 18 வயது மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கரவால் என்ற நகரில் வசிக்கும் பீம்சென் (45) என்ற நபருக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். அவர் வேலைக்கு செல்லாமல் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனைவியுடன் சண்டை போடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்து விட்டு, மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். மேலும் அவரை ஜன்னலின் கண்ணாடியை கொண்டு தாக்கியுள்ளார். அப்போது தந்தையை தடுக்க சென்ற மகள்களையும் சரமாரியாக தாக்கினார்.

woman attack 1

இதில் பலத்த காயமடைந்த ஒரு மகள், சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். பின்னர் பீம்சென் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்கு வந்த பீம்சென்னின் தம்பி, அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள், பீம்சென்னின் தம்பியிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர். இதனிடையே மயக்கமடைந்த 18 வயதுடைய மகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வன்முறை வழக்காக இருந்த இதை, கொலை வழக்காக மாற்றி பீம்சென்னை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it