ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம்.. பின்வாங்குகிறாரா எலான் மஸ்க் ?

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம்.. பின்வாங்குகிறாரா எலான் மஸ்க் ?

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம்.. பின்வாங்குகிறாரா எலான் மஸ்க் ?
X

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க், அனைத்து துறைகளிலும் கால்பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார். இவர் புதிய சமூக வலைதளத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்ககாத வகையில் அண்மையில் ட்விட்டர் தளத்தை வாங்குவதாக அறிவித்தார். அதன்படி சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் முடிவு செய்தார். இதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகள் டுவிட்டர் நிர்வாகக் குழு மற்றும் எலான் மஸ்க் தரப்பில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்து இருந்தார். டுவிட்டரில் 5 சதவீதம் போலி/ ஸ்பேம் கணக்குகள் பற்றிய முழு தரவுகள் அளிக்கப்பட வேண்டும் என்று எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தார்.

twitter

5 சதவீத போலி, ஸ்பேம் கணக்குகள் மட்டுமே இருப்பற்கான ஆதாரத்தை ட்விட்டர் நிர்வாகம் காட்டாவிட்டால் தனது ஒப்பந்தம் அடுத்தகட்டத்துக்கு நகராது என எலான் மஸ்க் எச்சரித்திருந்தார். இதன் மூலம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் நடவடிக்கையில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே 20% போலி பயனர்கள் அல்லது ஸ்பேம் கணக்குகளாக இருப்பதால் 44 பில்லியன் டாலர்கள் அதிகமாகத் தோன்றுவதாகவும், எலான் மஸ்க் ஒரு சிறந்த ட்விட்டர் ஒப்பந்தத்தை எதிர்பார்க்கக் கூடும் என்றும் டெஸ்லா ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மியாமி நகரில் நடைபெற்ற உச்சி மாநாடு ஒன்றில் பேசிய எலான் மஸ்க், அவர்கள் கூறுவதை விட அதிகம் போலி கணக்குகள் இருப்பதால் அதேவிலையை கொடுக்க முடியாது எனப்பேசியிருந்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it