கொலை மிரட்டல்.. புகார் அளித்த பள்ளி மாணவி தற்கொலையால் திடீர் திருப்பம் !!
கொலை மிரட்டல்.. புகார் அளித்த பள்ளி மாணவி தற்கொலையால் திடீர் திருப்பம் !!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் புகார் அளித்தும் சுற்றித்திரிந்ததால் பள்ளி மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே டொம்புச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பைக்கில் கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் கத்தியை காட்டி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் கடந்த 24 ஆம் தேதி மாணவியுடன் சென்று தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து புகார் மனு மீது போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். ஒருபுறம் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், மற்றொருபுறம் நேற்று முன்தினம் பள்ளி மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தேனி அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்ததால் அச்சம் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாகவும் மணிகண்டன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
newstm.in

