Theme Check

ஹிட்லரை போல மரணம் பிரதமர் மோடிக்கும் ஏற்படும் : காங். தலைவர் சர்ச்சை பேச்சு!!

ஹிட்லரை போல மரணம் பிரதமர் மோடிக்கும் ஏற்படும் : காங். தலைவர் சர்ச்சை பேச்சு!!

ஹிட்லரை போல மரணம் பிரதமர் மோடிக்கும் ஏற்படும் : காங். தலைவர் சர்ச்சை பேச்சு!!
X

ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் பிரதமர் மோடிக்கும் நேரும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாய், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

ஹிட்லரைப் போல நடந்து கொள்பவர்கள் அவரைப்போல் தான் இறப்பார்கள். பிரதமர் மோடியும் ஹிட்லரைப் போலதான் இறப்பார் என்று சுபோத் காந்த் சஹாய் பேசினார்.

modi_hitler

அவரின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில், இது போன்ற வார்த்தைகளை காங்கிரஸ் பயன்படுத்துவது முதல்முறை அல்ல என கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கேவலமான வார்த்தைப் பிரயோகம் செய்து வருகின்றனர் என்று கூறிய அவர், மக்கள் மோடி மீது அன்பு வைத்திருப்பதால்தான் தொடர்ச்சியாக அவரை வெற்றி பெறச்செய்து வருகின்றனர் என்றார்.

newstm.in

Next Story
Share it