Theme Check

3 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு !!

3 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு !!

3 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு !!
X

தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றுவரும் நிலையில் முகக்கவசம் அணிய எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதேநேரத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா உயர்ந்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

corona

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று ஒரேநாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு 1,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,58,445ஆக உள்ளது.

அதேநேரத்தில், மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது கூடுதல் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. அதாவது, 18 வயது இளம்பெண் நேற்று (14 ஆம் தேதி) தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது. பின்னர் அதேநாளில் அப்பெண் உயிரிழந்தார்.

corona

மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு அதாவது 3 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கொரோனா உயிரழப்பு பதிவாகியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 38,026ஆக உள்ளது. இதனையடுத்து தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


newstm.in

Next Story
Share it