Theme Check

‘சோம்பி’களாக மாறும் மான்கள்? பரவும் விசித்திரமான நோய்!!

‘சோம்பி’களாக மாறும் மான்கள்? பரவும் விசித்திரமான நோய்!!

‘சோம்பி’களாக மாறும் மான்கள்? பரவும் விசித்திரமான நோய்!!
X

சோம்பி நோய் கனடாவில் பரவுவதாக வெளியாகியுள்ள தகவல் உலகையே அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

சோம்பி (ZOMBIE) வகை ஹாலிவுட் திரைப்படங்கள் பார்த்திருக்கிறோம். தமிழிலும் ஜெயம் ரவி நடித்தமிருதன்உள்ளிட்ட சோம்பி படங்கள் வந்துள்ளன. இது விநோதமாக, வெறி பிடித்தவர்களைப் போல நடந்துகொள்ள வைக்கும்.

இப்படியான ஒரு நோய் சமீபத்தில் கனடாவில் பரவி வருவதாக ஒரு செய்தி வெளியாகி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கனடா நாட்டின் அல்பெர்டா, சாஸ்கட்ச்வான் ஆகிய பகுதிகளில் உள்ள மான்களிடையே Chronic Wasting Disease (CWD) என்ற நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.

zombie1

இந்த நோய் முதன்முதலில் 1960ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்காவின் 26 மாகாணங்களில் பரவியது. தற்போது இதே நோய் தற்போது கனடாவில் பரவி வருகிறது.

இந்த நோய் விலங்குகளை தாக்கியதும் நேரடியாக அதன் மூளையின் ப்ரியான் என்னும் புரத அமைப்பைத் தாக்கும் என்றும், பாதிக்கப்பட்ட விலங்குகளின் வாயில் வழக்கத்தை விட அதிகமாக எச்சில் வடிவது, வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைககள் போன்ற அறிகுறிகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

zombie1

இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவவும் வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோய்கிருமிகள் மனித ரத்தத்துடன் கலந்துவிட்டால் அது மனித உடலுக்குள் பரவ துவங்கிவிடும் என்றும், மனிதர்களும் ஜாம்பிகளாக மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

இதுவரை இந்நோயால் மனிதர்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.

newstm.in

Next Story
Share it