உடனே இந்த 7 செயலிகளை டெலிட் செய்யுங்க..!!
உடனே இந்த 7 செயலிகளை டெலிட் செய்யுங்க..!!

ஒரு செயலியை நாம் இலவசமாகவோ பணம் கொடுத்தோ வாங்குகிறோம் என்றால், அந்தச் செயலியின் பயன்பாடுகளை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமோ என்ற கேள்வி உங்களுக்கு எழ வேண்டும். இல்லையென்றால் அந்த செயலிகளால் ஏற்படும் ஆபத்தை நீங்கள் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும்.
ஒரு செயலியை உங்களுடைய செல்பேசியில் பதிவிறக்கம் செய்தவுடனேயே அது கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் நாம் முன்யோசனையின்றிப் பதில் சொல்லவும், நம்முடைய தனிப்பட்ட தகவல்கள், தரவுகளைத் தருவதற்கும் தயாராகிவிடுகிறோம். இதனால், உங்கள் ஒப்புதலுடனே உங்களின் அந்தரங்களை தகவல்களை எடுத்துக் கொண்டே இருக்கும்.
அந்தத் தகவல்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகத் திரட்டி வைத்துக்கொண்டு, நம்மை வணிக நிறுவனங்களுக்கு இந்தச் செயலிகள் மூலமாக விற்றுவிடுகிறார்கள். பொதுவெளியிலோ அல்லது தனிப்பட்ட முறையில் சைபர் கிரைம் கொள்ளையர்கள் உங்களை மிரட்டத் தொடங்கும்போதோ தான் தெரியவரும். அந்த நேரத்தில் நீங்கள் பதறுவதால் எந்த பயனும் விளையப்போவதில்லை.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நீங்கள், செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன் அந்த செயலியை பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். இதுதான் உங்களுக்கு பாதுகாப்பு.
அந்தவகையில், தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட செயலிகளில் சில அத்தகைய தகவல் திருட்டில் ஈடுபட்டடு கொண்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான புகார் மற்றும் டெக் வல்லுநர்களின் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த செயலிகள் ஆபத்தானவை என்ற லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளன. தனிநபர் தகவல் திருட்டு மற்றும் உளவு வேலைகளில் ஈடுபடுவதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 செயலிகள் எவை என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
- டெய்லி பின்டன்ஸ் (Daily Fitness OL)
- என்ஜாய் போட்டோ எடிட்டர் (Enjoy Photo Editor)
- பனோரமா கேமரா (Panorama Camera)
- போட்டோ கேமிங் பஸில் (Photo Gaming Puzzle)
- ஸ்வார்ம் போட்டோ (Swarm Photo)
- பிஸ்னஸ் மெட்டா மேனேஜர் (Business Meta Manager)
- கிரிப்டோமைனிங் ஃபார்ம் (Cryptomining Farm Your Own Coin)
இந்த 7 செயலிகளும் மிகவும் ஆபத்தானவை என கண்டறியப்பட்டு, பயணர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஒருவேளை நீங்கள் இந்த செயலிகளை பயன்படுத்திக் கொண்டு இருந்தால், உடனே அதை டெலிட் செய்துவிடுங்கள்.