Theme Check

ஐபிஎல் ஏலத்தில் இந்த தமிழக வீரருக்கு செம டிமாண்ட்!!

ஐபிஎல் ஏலத்தில் இந்த தமிழக வீரருக்கு செம டிமாண்ட்!!

ஐபிஎல் ஏலத்தில் இந்த தமிழக வீரருக்கு செம டிமாண்ட்!!
X

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 8.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் போன்ற இந்திய வீரர்கள் அதிக ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு நல்ல டிமான்ட் இருந்த நிலையில் அவரை ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது. எதிர்வரும் சீசனில் அவர் அந்த அணிக்காக விளையாட உள்ளார்.

washingtonsundar

42 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சுந்தர் 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2017-இல் புனே அணிக்காகவும், 2018 முதல் பெங்களூர் அணிக்காகவும் அவர் விளையாடி வந்தார். தற்போது ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார்.

காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் தற்போது இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். மற்றொரு சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான குர்ணல் பாண்ட்யாவை 8.25 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

newstm.in

Next Story
Share it