Theme Check

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக் கோரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக் கோரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக் கோரிக்கை!!
X

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுப்பாடு காரணமாக இழப்பு ஏற்படுவதாக ஜியோ பிபி மற்றும் தயாரா எனர்ஜி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

கடந்த சில நாட்களாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மேலும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியையும் குறைத்து அறிவித்தது. இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

petrol

மேலும் பெட்ரோல் டீசல் அடக்க செலவில் மூன்றில் இரண்டு பங்கு விலைக்கு விற்கப்படுவதால் பெட்ரோலில் லிட்டருக்கு ரூபாய் 14 முதல் 18 ரூபாயும், டீசலில் 20 முதல் 25 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தற்போது விலையை உயர்த்த வேண்டும் என கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it