நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் தர்ணா உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த தடை..!!

நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் தர்ணா உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த தடை..!!

நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் தர்ணா உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த தடை..!!
X

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் குறிப்பிடப்பட்ட புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. மேலும் இதனை உறுப்பினர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Parliament

அந்த புத்தகத்தில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார்,நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக குறப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டம், மத நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக மாநிலங்கலவை செயலாளர் பி.சி.மோடி கூறியுள்ளார். போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை என மாநிலங்களவை எம்.பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

circular

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியல் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் (2022-23ஆம் நிதியாண்டு) ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it