அழிக்க நினைத்தவர்களுக்கே அழிவு.. முதல்வர் ஸ்டாலின் மறைமுக தாக்கு..!
அழிக்க நினைத்தவர்களுக்கே அழிவு.. முதல்வர் ஸ்டாலின் மறைமுக தாக்கு..!

சென்னை திருவான்மியூரில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேத்தி தீப்தி - விஸ்வக்சேனா திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத்தில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டுத் திருமணம் நடப்பதைப் போல எண்ணி நாமெல்லாம் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இன்னொரு பக்கத்தில் - திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்சினைக்கெல்லாம் போக விரும்பவில்லை. அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை.
ஆனால், அவர்கள்தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். திமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது. எனவே அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்” என்றார்.

