செல்வராகவன் மூலம் மிரட்டும் தனுஷ்.. கம்பீரம் குறைந்ததா அன்புமணிக்கு?
செல்வராகவன் மூலம் மிரட்டும் தனுஷ்.. கம்பீரம் குறைந்ததா அன்புமணிக்கு?

நடிகர் தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார்.
அசுரடன் திரைப்படத்துக்கு பிறகு சில படங்கள் சறுக்கிய நிலையில் கட்டாய வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார் தனுஷ். எனவே அவரும் அவரது ரசிகர்களும் இப்படங்கள் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என நம்பியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்துள்ள நானே வருவேன் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் உருவாவதால் ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கெத்தாக சிகரெட்டை பிடித்துக்கொண்டு தனுஷ் இருக்கும் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது. மேலும் இப்படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகின்றது.
🤓🤓🤓 #NaaneVaruven pic.twitter.com/XXqgRLJG5k
— selvaraghavan (@selvaraghavan) March 25, 2022
அதேநேரத்தில் இந்த போஸ்டர் விமர்சனத்தையும் உண்டாக்கியுள்ளது. வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பதுபோன்ற காட்சிகள் இருந்தன. இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சிகரெட் பிடிப்பதுபோன்ற காட்சிகளுடன் போஸ்டர் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in

