தனுஷின் யூட்யூப் சேனல் முடக்கம்.. ரவுடிபேபி உள்பட அனைத்து வீடியோக்களும் டெலிட் !!

தனுஷின் யூட்யூப் சேனல் முடக்கம்.. ரவுடிபேபி உள்பட அனைத்து வீடியோக்களும் டெலிட் !!

தனுஷின் யூட்யூப் சேனல் முடக்கம்.. ரவுடிபேபி உள்பட அனைத்து வீடியோக்களும் டெலிட் !!
X

நடிகர் தனுஷின் உண்டர்பார் (Wunderbar) யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளதால் அதில் இருந்த பாடல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் உயர்ந்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இவர் நடித்த ஹாலிவுட் திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்கள் தயாரிப்பு, பாடல் எழுதுவது, பாடல் பாடுவது, திரைப்படங்களை இயக்கியும் பல்துறைகளில் அசத்தி வருகிறார்.

rowdy baby

அந்த வகையில், நடிகர் தனுஷ் உண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த பேனரின் கீழ் 3, வேலையில்லா பட்டதாரி, எதிர்நீச்சல், காக்கிசட்டை, நானும் ரவுடிதான், தங்கமகன் உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டன.

உண்டர்பார் நிறுவனத்தின் கீழ், யூடியூப் சேனல் ஒன்று wunderbar films என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தது. இதில் உண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள், நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா உள்ளிட்டவை பதிவேற்றம் செய்து வரப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சேனல் ஆக்டிவாக இருந்ததால், தமிழ் சினிமா ரசிகர்கள் ஏராளமானோர் பின்தொடர்ந்து வந்தனர். குறிப்பாக மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி வீடியோ பாடல் இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த பாடல் 120 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து இந்திய அளவில் சாதனை ஏற்படுத்தியிருந்தது.

rowdy baby

இந்நிலையில், உண்டர்பார் பிலிம்ஸ் யூடியூப் சேனல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உண்டர்பாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தகவல் ஏதும் பகிரப்படவில்லை. இருப்பினும், முடக்கப்பட்ட யூடியூப் சேனலை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இதையடுத்து, யூடியூபில் இந்த சேனல் மற்றும் ரவுடி பேபி பாடல்களை தேடியவர்களுக்கு அவை கிடைக்கவில்லை. ஏற்கனவே சாதனை படைத்த இப்பாடல் மீண்டும் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் எதற்கான முடக்கப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.

newstm.in

Tags:
Next Story
Share it