மாணவியை தனிமைக்கு அழைத்த காவலருக்கு தர்ம அடி!!
மாணவியை தனிமைக்கு அழைத்த காவலருக்கு தர்ம அடி!!

திருப்பூரில் பெண்ணை தனிமைக்கு அழைத்த காவலருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
அவிநாசி வெள்ளியம் பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலருடன் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சுப்பிரமணி(38) இருவரிடமும் விசாரணை செய்து அலைபேசி எண்ணை பெற்றுள்ளார்.
இதைதொடர்ந்து, பெண்ணின் எண்ணுக்கு அழைத்த காவலர் மாணவியை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவலர் கூறிய இடத்திற்கு சென்று அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதில் காயமடைந்த காவலர் சுப்பிரமணி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் காவலர் சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
newstm.in

