ரூ.40 கட்டணத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் கேப்டன் தோனி
ரூ.40 கட்டணத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் கேப்டன் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முழங்கால் மூட்டு வலிக்கு உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தோனியின் பெற்றோர் அந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு நலன் பலன் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அந்த வைத்தியரை தோனி சந்தித்துள்ளார்.
சந்திப்பின் போது தனது இரண்டு மூட்டுகளிலும் வலி இருப்பதாக சொல்லி தோனி 40 ரூபாய் கொடுத்து ஒரு டோஸ் மருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத வைத்தியரின் பெயர் வந்தன் சிங்.

ராஞ்சியில் அவர் மிகவும் பிரபலம். பல்வேறு மூலிகைகளை பாலில் கலந்து, நோயாளிகளிடம் அவர் கொடுப்பார். ஒரு மாதத்திற்கு முன்னர் தோனி மருந்து வாங்கி சாப்பிட்டதாகவும், அடுத்து எப்போது வருவார் என்று தெரியவில்லை எனவும் வந்தன் சிங் கூறியுள்ளார்.
முதலில் அவர் தோனியை அடையாளம் காணவில்லை. மக்கள் அனைவரும் அவரை படம் பிடிக்க முயன்ற போது தோனியை அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளார். வரும் ஐபிஎல் தொடரிலும் தோனி பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

