சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தல தோனி!!
சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தல தோனி!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக விளையாட உள்ளதாக சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி உறுதியாக தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசன் மிக மோசமாக அமைந்துவிட்டது. இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் மொத்த 4 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. 9 போட்டிகளில் தோல்வியை தழுவியது.
இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் டாஸ் போடும் போது மைதானத்தில் வர்ணனையாளர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் தோனி அளித்தார்.

முக்கியமாக அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நிச்சயமாக. ஏனெனில் சென்னை ரசிகர்களுக்கு நேரில் நன்றி சொல்லாமல் செல்வது நியாயமாக இருக்காது என்றார்.
சென்னை மைதானத்தில் விளையாடாமல் மும்பையிலேயே விடைபெற்றுக் கொள்வது சென்னை ரசிகர்களுக்கு உகந்ததாக இருக்காது. வரும் சீசன்களில் அனைத்து மைதானங்களிலும் விளையாடும் போது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நன்றி சொல்லி விடை பெறுவதே சரியாக இருக்கும் என்றார்.
Y. E. S! 👏 👏
— IndianPremierLeague (@IPL) May 20, 2022
𝗠𝗦 𝗗𝗵𝗼𝗻𝗶 𝗪𝗶𝗹𝗹 𝗕𝗲 𝗕𝗮𝗰𝗸! 💛 💛
Follow the match ▶️ https://t.co/ExR7mrzvFI#TATAIPL | #RRvCSK | @msdhoni | @ChennaiIPL pic.twitter.com/mdFvLE39Kg
newstm.in

