Theme Check

ஒரே திமுக கவுன்சிலர் 2 வாக்குகள் பதிவு செய்தாரா? - பரபரப்பு புகார் !

ஒரே திமுக கவுன்சிலர் 2 வாக்குகள் பதிவு செய்தாரா? - பரபரப்பு புகார் !

ஒரே திமுக கவுன்சிலர் 2 வாக்குகள் பதிவு செய்தாரா? - பரபரப்பு புகார் !
X

திமுக கவுன்சிலர் 2 வாக்கினை பதிவு செய்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் 56ஆவது வார்டில் திமுக சார்பில் மஞ்சுளா தேவி என்பவர் போட்டியிட்டார். இந்த நிலையில், மஞ்சுளா தேவி இரண்டு இடங்களில் வாக்குப்பதிவு செய்ததாக புகார் எழுந்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

vote

முதலில், 646ஆவது வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த மஞ்சுளா தேவி, பின்னர் 647ஆவது வாக்குசாவடியில் முத்துலட்சுமி என்பவரின் வாக்கினையும் பதிவு செய்ததாக கூறப்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சியினர் பரபரப்பு புகார் கிளப்பினர். மேலும் திமுகவின் மஞ்சுளா தேவியின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாநில தேர்தல் ஆணையர் ஜூன் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

newstm.in

Next Story
Share it