குடியரசுத் தலைவரை அவமதித்தாரா பிரதமர்? – வீடியோ வைரல்!!
குடியரசுத் தலைவரை அவமதித்தாரா பிரதமர்? – வீடியோ வைரல்!!

குடியரசுத் தலைவராக பதவிக்காலம் முடிந்து வெளியேறும் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை பிரதமர் மோடி அவமதித்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோக்களை எதிர்க்கட்சி பிரமுகர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
ऐसा अपमान Very Sorry Sir
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) July 24, 2022
ये लोग ऐसे ही हैं, आपका कार्यकाल ख़त्म अब आपकी तरफ़ देखेंगे भी नही। pic.twitter.com/xaGIOkuyDM
சம்பந்தப்பட்ட காணொலியில் குடியரசுத் தலைவர் நடந்து வந்து பிரதமர் உள்ளிட்ட ஒவ்வொரு தலைவருக்கும் வணக்கம் வைத்து வருகிறார். மோடிக்கு குடியரசுத் தலைவர் வணக்கம் செலுத்தும் போது பிரதமர் கேமராவை பார்ப்பது போன்று உள்ளது.
ஆனால் இந்த வீடியோ கிராப் செய்யப்பட்டு தவறான அர்த்தத்தில் பகிரப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வின் முழு காணொலியும் வெளியாகியுள்ளது. அதில், குடியரசுத் தலைவர் நடந்து வந்து வணக்கம் செலுத்தியபோது முன்னரே பிரதமர் மோடி அவருக்கு பதில் வணக்கம் செலுத்தி விடுகிறார்.
Claim: प्रधानमंत्री ने राष्ट्रपति को अभिवादन नहीं किया
— Shubhankar Mishra (@shubhankrmishra) July 24, 2022
Reality : साफ़ देखा जा सकता है कि प्रधानमंत्री ने पूर्व राष्ट्रपति का ‘अभिवादन’ किया।
Conclusion : कुछ लोगों ने बड़ी ‘चालाकी’ से वीडियो के शुरूआती हिस्से को काट कर पीएम पर सवाल खड़े किए। जो ग़लत है। pic.twitter.com/Mdz4yCAuD7
வைரலான வீடியோவின் முந்தைய சில நிமிடங்களில் இது வரும் நிலையில், அந்த பகுதியை வெட்டி பிற்பகுதி மட்டும் பரப்பப்பட்டு வந்துள்ளது. மேலும், குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி பதில் வணக்கம் செலுத்தும் புகைப்படத்தைக் குடியரசுத் தலைவர் மாளிகை ட்விட்டர் பக்கமும் வெளியிட்டுள்ளது.
newstm.in

