Theme Check

பல முறை கூறியும் கேட்கவில்லை.. கள்ளக்காதலால் 2 குடும்பங்கள் மோதல் !!

பல முறை கூறியும் கேட்கவில்லை.. கள்ளக்காதலால் 2 குடும்பங்கள் மோதல் !!

பல முறை கூறியும் கேட்கவில்லை.. கள்ளக்காதலால் 2 குடும்பங்கள் மோதல் !!
X

விடாமல் துரத்திய மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்து முட்புதரில் வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு பகுதியை சேர்ந்தவர் சிவண்ணா (45 ). சிவண்ணாவுக்கும், அதே ஊரில் வசிக்கும் சந்திரண்ணா என்பவரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.

இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அக்கம்பக்கத்தினர் கூற, மனைவியின் செயல் சந்திரண்ணாவின் காதுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அவர் தன் மனைவியையும், வியாபாரி சிவண்ணாவையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளனர்.

2

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரண்ணா, சிவண்ணாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக, தனது அண்ணன் மகன் சந்தீப்புடன் சேர்ந்து திட்டம்போட்டுள்ளார், அதன்படி, அவர்கள் 2 பேரும் சேர்ந்து சிவண்ணாவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து, உடலை முட்புதரில் வீசிவிட்டு சென்றனர் .

புதரில் உடல் கிடப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், நேரில் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ,கள்ள காதல் தகராறில் சிவாண்ணாவை , சந்திரன்னா மற்றும் சந்தீப் கொன்றதை கண்டறிந்தனர். பின்னர் இருவரையும் கைது செய்தனர் .இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


newstm.in

Next Story
Share it